கோடை காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் அளவு அதிக அளவில் காணப்படுகிறது. சில மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிர் இழப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதும் இந்திய வானிலை ஆய்வு மையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை விட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, மத்திய பிரதேசம், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் […]
டிச.2 வது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தற்போது நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும்,அடுத்த 12 மணி நேரத்தில் அது ஜாவத் புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Depression intensified into Deep Depression over westcentral adjoining southeast Bay of Bengal at 0530 IST […]
இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடலில் அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று 12 மணி நேரத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் தற்பொழுது இல்லை என இந்திய […]
அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது,தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமானில் முன்னதாக உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது,தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து […]
தமிழகம்:காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி,தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் கனமழை முதல் அதிக […]
வங்க கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் நள்ளிரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த ஆறு மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறியது. இதனை அடுத்து இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு வடக்கு […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. புதிதாக உருவாகக் கூடிய இந்த […]
அரபிக்கடலில் மே 16 ஆம் தேதி “தக்டே” என்ற புயல் உருவாக வாய்ப்புள்ளது எனவும்,அவ்வாறு உருவாகினால் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இந்நிலையில்,அடுத்த இரு நாட்களில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது,வருகின்ற […]
உம்பன் புயல் ஏற்பட்ட நேரத்தில் துல்லியமான தகவலை கணித்து வழங்கிய இந்திய வானிலை மையத்திற்கு உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டு தெரிவித்துள்ளது. கடந்த மே மதம் கடலில் உருவாகிய உம்பன் புயல் நகர்வுக் குறித்த தகவல்கள் அத்தனையையும் கடந்த மே 16-ம் தேதி முதல் 21ம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் தான் துல்லியமாக கணித்து வழங்கியது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை மாறுபடும் உம்பன் […]
கேரளாவில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.குறிப்பாக இடுக்கி ,மலப்புரம் ,வயநாடு , கண்ணூர், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆறு மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் 204 மில்லி மீட்டர் அளவிற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து […]