குஜராத் : மேலும் இருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி – மொத்த பாதிப்பு 25 ஆக உயர்வு!

In Gujarat, he has also been diagnosed with omega-3 infections, bringing the total number of cases to 25.

குஜராத்தில் மேலும் இருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி புதிய வகை கொரோனாவாக பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் கொரோனா  கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இது பரவியுள்ள நிலையில், முன்னதாக 23 பேர் நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது குஜராத்தில் மேலும் இரண்டு பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் ஓமைக்ரானால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.