இந்தியாவில் படிப்படியாக குறையும் தொற்று பாதிப்பு...! 3.66 லட்சம் பேருக்கு தொற்று உறுதி...! 3,754 பேர் உயிரிழப்பு...!

In India, 3,66,161 people have been confirmed infected in the last 24 hours, leaving 3,754 dead.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3,754  பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஒவ்வொரு மாநில அரசும் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3,754  பேர் உயிரிழந்துள்ளனர். 3,53,818 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,26,62,575  ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,46,116 ஆகவும், குணமடைந்தோர் எணிக்கை 1,86,71,222 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், இந்தியா முழுவதும், 17,01,76,603 பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில், நேற்று முன்தினம் 4.01 லட்சம் பேருக்கும், நேற்று 4.03 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.66 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.