இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை332 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,77,113 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1300 குறைவு.மேலும்,266 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,43,77,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 332 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,61,389 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,982 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,37,75,086 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.25% ஆக அதிகரிப்பு.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,40,638 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.263 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,09,08,16,356 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 59,08,440 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.