கால்நடைகளுக்கான நிதி ஒதுக்கீடு! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு!
கால்நடைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்பாய் வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். தற்போது மூன்றாம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்துக்காக ரூ.13,343 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100% கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.