ராகுல் காந்தியுடன் ஒற்றுமை யாத்திரையில் இணைந்தார், முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர்.!
பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரையில் ராஜஸ்தானில் நடந்த யாத்திரையின் போது ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டார். கடந்த செப்டம்பர் 7ஆம் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெறுகிறது.
பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பாரத் ஜோதா யாத்திரையின் 100 நாட்களை நிறைவு செய்யும் மைல்கல்லை முன்னிட்டு ஜெய்ப்பூரில் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி, காங்கிரஸ் சார்பில் பாடகர் சுனிதி சவுகானின் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தப்படும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இன்று காலை ராஜஸ்தானின் சவாய் மாதோபூரின் படோதியில் இருந்து மீண்டும் தொடங்கிய இந்த பாத யாத்திரையின் போது ராகுல் காந்தியுடன் முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன், சச்சின் பைலட் ஆகியோரும் இணைந்துள்ளார்