முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி!

Former Prime Minister of India Deve Gowda and his wife have been diagnosed with corona infection. He announced this on his Twitter page.

இந்தியாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், “நானும், என் மனைவி சென்னம்மாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். கடந்த சில நாட்களாக எங்களுடன் தொடர்பு கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

unknown node