காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Five terrorists have been shot dead in a clash between security forces and militants in Kashmir.

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில்  ஹன்ஜின் ராஜ்போரா எனும் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்த நிலையில், அப்பகுதியில் மோதல் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த மோதலில் லக்ஷர் இதொய்பா கமெண்ர் நிஷாஸ் லோன் மற்றுமொரு பாகிஸ்தான் பயங்கரவாதி உட்பட 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக காவல்துறையினர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.