கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து.! இரங்கல் தெரிவித்த மோடி.!

கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுவர்ணா பேலஸ் என்ற ஓட்டல் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. அதில் 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக திடீரென ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைத்தனர்.அந்த தீ விபத்தில் முதற்கட்டமாக 7 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மீட்பு துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் நடந்த இந்த விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்துதனதுட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, என் எண்ணங்கள் முழுவதும் தங்கள் அன்புரிக்குரியவர்களை இழந்த அந்த குடும்பத்தின் மீது உள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தான் ஆறுதல் தெரிவிப்பதாகவும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.

மேலும் தீ விபத்தின் தற்போதைய நிலைமையை குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனிடம் கேட்டறிந்ததாகவும், தேவையான அனைத்து உதவிகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

unknown node