#Breaking: தேர்தல் முடிவுகள் வெளியாவது எப்பொழுது?? அறிவித்தார் தலைமை தேர்தல் அதிகாரி!

Chief Electoral Officer Sunil Arora has announced that the election results in 5 states including Tamil Nadu will be released on May 2.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வரும் மே 2-ம் தேதி வெளியாகும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து தேர்தல் நடைபெறக்கூடிய மாநிலங்களின் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தமிழகம் -234, புதுச்சேரி – 30, கேரளா – 140, மேற்கு வங்கம் – 294, அசாம் – 126 தொகுதிகளில் தேர்தல் நடக்கும் என்றும், வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம்நீடிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 80 வயது மேற்பட்ட முதியோர்கள், விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம் என தெரிவித்த அவர், கொரோனா நோயாளிகள், அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வரும் மே 2-ம் தேதி வெளியாகும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.