புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், அம்மாநிலத்தில் நேற்று மாலை 7 மணி வரை 81.70 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், அசாமில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அந்தவகையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நேற்று நடந்து […]
புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தில் 1:30 மணி நிலவரப்படி 53.01 சதவீத வாக்குகள் பதிவானது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு மொத்தமாக 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் காரணமாக அம்மாநிலத்தில் புதன்கிழமை காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தடையின்றி வாக்களிக்க மத்திய ஆயுதப்படை பணியில் இருக்கும் என்று […]
புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தில் 11 மணி நிலவரப்படி 20.07 சதவீத வாக்குகள் பதிவானது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு மொத்தமாக 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் காரணமாக அம்மாநிலத்தில் புதன்கிழமை காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தடையின்றி வாக்களிக்க மத்திய ஆயுதப்படை பணியில் இருக்கும் என்று தேர்தல் […]
தங்கத்தை விட மணலின் விலை அதிகமாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியது. அந்தவகையில், மதசார்பற்ற கூட்டணினியின் மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் சின்னசாமி அவர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்தில் தங்கத்தை விட மணலின் விலை அதிகரித்துள்ளதாகவும், […]
பல குளறுபடிகளுக்கு மத்தியில் இன்று மாலை அல்லது நாளை காலை காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொன்னேரி (தனி), வேளச்சேரி, தென்காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், குளச்சல் உள்ளிட்ட […]
உண்மையான விசுவாசத்துடன் பணியாற்றினால் எம்.எல்.ஏக்களை யாராலும் விலைகொடுத்து வாங்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை நேற்று தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதனையடுத்து அந்த 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக […]
80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம் என்றும், தபால் வாக்கு முறை கட்டாயம் அல்ல என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார். டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் – 234 தொகுதிகள் , புதுவை – 30 தொகுதிகள், கேரளம் – 140 தொகுதிகள், மேற்குவங்கம் – 294 தொகுதிகள் ,அசாம் – 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், […]
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வரும் மே 2-ம் தேதி வெளியாகும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்துள்ளார். டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து தேர்தல் நடைபெறக்கூடிய மாநிலங்களின் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தமிழகம் -234, புதுச்சேரி – 30, கேரளா – 140, மேற்கு […]