அருணாச்சலப்பிரதேசத்தில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம்..!

At 10.15 am a small earthquake shook the state of Arunachal Pradesh.

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் இன்று காலை 10.15 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 10.15 மணிக்கு உணரப்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் படி, நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக அளவிடப்பட்டுள்ளது. எனினும், இதுவரை நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக, செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று மாநிலத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 10.11 மணிக்கு உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.