இ-ஸ்போர்ட்ஸ் – மத்திய அரசு அதிகாரப்பூர்வ அங்கீகாரம்!
இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம்.
எஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகள் இப்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் ஒரு விளையாட்டாக அங்கீகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்தியாவில் நடைபெறும் “மல்டி ஸ்போர்ட்ஸ் நிகழ்வு” பிரிவின் ஒரு பகுதியாக மின்னணு (E-sports) விளையாட்டுகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான முக்கிய அமைச்சகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.