டிஆர்பி மோசடி வழக்கு: ரிபப்ளிக் டிவி சி.இ.ஓ-விற்கு 2 நாள் போலீஸ் காவல்..!

Vikas Kanchandani, who was produced in court today, has been remanded in police custody for 2 days. DRP fraud case

டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார்.

அவர் முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை அணுகிய பின் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சந்தனி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விகாஸ் காஞ்சந்தனியை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கநீதிமன்றம் அனுமதி வழங்கியது.