நாளை முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு- டெல்லி பல்கலைக்கழகம்!

The Delhi University has announced that colleges will function with 100% staff strength from February 1 for the final-year students.

நாளை முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் திறக்கப்படும் என்று டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய பொது, நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும்  மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மத்திய அரசு வழங்கிய தளர்வுகளின் அடிப்படையில் பள்ளிகள், கல்லூரிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் திறக்கப்படும் எனவும், நாளை முதல் 100 சதவீத ஊழியர்களுடன் கல்லூரிகள் செயல்படும் என்று டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.