டெல்லி : தீபாவளியில் வெடித்த துப்பாக்கி சத்தம்! 2 பேர் பலி..நடந்தது என்ன?

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஷாஹ்தாராவில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

delhi gun shot diwali murder

புதுடெல்லி :தீபாவளி தினத்தன்று டெல்லியின் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான குழப்பான சிசிடிவி காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியும் வருகிறது. வீடியோவில் இருவர் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருக்கிறார்கள். இருவர் அந்த பகுதியில் ஒருவர் பைக்கில் மற்றொருவருடன் பேசிக்கொண்டு வருகிறார்கள்.

பிறகு திடீரென எதோ பேசிக்கொண்டு ஒருவர் வீட்டிற்குள் செல்ல பைக்கில் வந்தவருடன் பேசிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென வேகமாக இறங்கி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வீட்டிற்குள் சென்ற அந்த நபரைச் சுடுகிறார். பின் வீட்டிற்கு வெளியே இருந்த மற்றொருவர் அவரை துரத்த அவர் பைக்கில் ஏறி சென்றதுடன் வீடியோ முடிந்தது. என்ன காரணத்துக்காக இந்த சம்பவம் நடந்தது என்ற காரணம் தெரியாமலே வீடியோ வைரலாகி கொண்டு இருந்தது.

unknown node

எனவே, இந்த பிரச்சினையில் கடும் கோபம் அடைந்த குற்றம்சாட்டப் பட்ட 17 வயது சிறுவன் ஆகாஷை தீர்த்துக்கட்ட வேண்டும் என ஒருவரை அழைத்து வந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட வைத்து கொலை செய்யத் திட்டமிட்டு இருக்கிறார். நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆகாஷ் தனது மருமகன் ரிஷப் ஷர்மா(16), மற்றும் மகன் கிரிஷ் பிஹாரி காலணியில் உள்ள தங்கள் வீட்டிற்கு வெளியே கொண்டாடிக் கொண்டு இருந்துள்ளார்.

பிறகு, இரவு 8 மணியளவில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஸ்கூட்டியில் அங்கு வந்துள்ளனர். அப்போது பைக் ஓட்டியவர்களில் ஒருவர் ஆகாஷின் கால்களைத் தொட்டார், மற்றொருவர் முகமூடி அணிந்து அருகில் நின்றுகொண்டிருந்தார். திடீரென முகமூடி அணிந்த நபர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். பிறகு, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அவர்கள் இருவரையும் துரத்திய ரிஷப் சென்றார். அப்போது அவர் மீதும் துப்பாக்கிக்குண்டு பாய அவரும் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ரிஷப் (16) மற்றும் ஆகாஷ்(40), ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், ஆகாஷின் மகன் கிரிஷ்(10) காயமடைந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரையும், செய்ய கூறி குற்றம்சாட்டப்பட்ட அந்த 17வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படியான சம்பவம் டெல்லியின் ஷாஹ்தாராவில் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.