திருப்பதி கோவிலில் தரிசனம்:இன்று முதல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு!லிங்க் இதோ!

ஆந்திரா:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத் தரிசனத்திற்கு ரூ.300 டிக்கெட்டிற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 9 மணி முதல் தொடங்கப்படவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.அதன்படி, சிறப்பு தரிசனத்திற்கு ரூ.300-க்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி,தினமும் 20 ஆயிரம் வீதம் மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரம்(ரூ.300-க்கான) தரிசன டிக்கெட்டுகளை விற்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
அதே சமயம்,இலவச தரிசன டிக்கெட்கள் நாளை (25 ஆம் தேதி) காலை 9 மணி முதல் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வீதம் மொத்தம் என 1 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.
அதன்படி,இலவச தரிசனத்தில் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு நேரடியாக ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் எனவும்,ஆன்லைனில் 5 ஆயிரம் டிக்கெட்கள் எனவும் தினந்தோறும் 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும்,திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் பெற இன்று காலை 9 மணி முதல் https://www.tirumala.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடாலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025