திருமணத்திற்கு முன் போட்டோஷூட் நடத்திய தம்பதிகள்! தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்!

திருமணத்திற்கு முன் போட்டோஷூட் நடத்திய தம்பதிகள். காவிரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பரிதாபம்.
பெங்களூரு, மைசூர் கட்டமரனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (28) – சசிகலா (20). இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நிச்சயம் நடைபெற்றது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் காவிரி ஆற்றில் ஒரு படகின் மீது நின்று, போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் போது, படகு கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. இருவரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில், போட்டோகிராஃபர் மற்றும் அவருடன் உதவிக்கு வந்த சிறுவன் இருவரும், அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
ஆனால், இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், ஆறறில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025