மும்பையில் ஒரே நாளில் 917 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்தது!

மும்பையில் ஒரே நாளில் 917 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,25,239 ஆக அதிகரித்துள்ளது.

மும்பையில் ஒரே நாளில் 917 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,25,239 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அங்கு ஒரே நாளில் 1,154 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 99,147 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,890 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18,905 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைககம் தெரிவித்துள்ளது.