381 பேருக்கு கொரோனா – டெல்லியில் குறைந்து வரும் தொற்று எண்ணிக்கை..!

The state government has reported 381 corona infections in Delhi in the last 24 hours.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 381 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனை76,857பேருக்கு டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்381பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் நோய் தொற்று பாதிப்பு விகிதம்1சதவிகிதத்திலிருந்து0.5ஆக குறைந்துள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை14,29,244ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால்34பேர் உயிரிழந்துள்ளனர்.1,189பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை24,591ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை13,98,764பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது டெல்லியில்5,889பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.