ATM மூலம் பரவிய கொரோனா – 3 இந்திய ராணுவம் பாதிப்பு!
குஜராத்தில் ராணுவ வீரர்களுக்கு ஏடிஎம் மிஷினில் இருந்து கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தினம் தினம் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. ஆனால் குணமாகியவர்கள் பலரும் வீடு சென்று கொண்டுதான் உள்ளனர். இந்நிலையில், தற்பொழுது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடாவில் பாதுகாப்பு பணியில் இருந்த மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது அவர்களுக்கு மனிதர்கள் மூலமாக கொரோனா பாதிப்பும் வரவில்லை. குஜராத்தில் உள்ள ஏடிஎம் மிஷின் ஒன்றிலிருந்து இந்த கொரோனா பரவி உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அந்த 3 வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 28 வீரர்கள் தற்பொழுது தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த ஏடிஎம் தூய்மைப் படுத்துவதற்கான சீலிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஏடிஎம் மிஷினை பயன்படுத்திய அனைவரும் தாங்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.