சதி திட்டங்களை தீட்டி பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறது- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Congress plans to campaign against the BJP government, says Union Minister Nirmala Sitaraman

சதி திட்டங்களை தீட்டி பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறது  என்று  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நேற்று விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்ததாக தெரிவித்தார்.

ஆனால் தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றது.

இந்த நிலையில்  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சதி திட்டங்களை தீட்டி பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறது .பாஜக அரசு மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்புவோர் மீது வழக்கு தொடருவோம் என்று  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.