நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி..!

டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியின் மாணவி ஐஸ்வர்யா கடந்த நவம்பர் 2 ம் தேதி தெலுங்கானாவில் உள்ள தனது சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டார்.
உள்ளூர் காவல்துறையினரின் கூறுகையில், ஐஸ்வர்யா ரெட்டி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக இருக்கும் சீனிவாஸின் மகள். இவர் 12 -ஆம் வகுப்பில் 98.5 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். ஐஸ்வர்யாவின் தந்தை சீனிவாஸ் ரெட்டி, கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவை டெல்லியில் புகழ்பெற்ற கல்லூரியில் சேர்த்துள்ளார்.
ஐஸ்வர்யா பி.எஸ்சி. கணிதம் (ஹானர்ஸ்) படித்து வந்துள்ளார். ஐஸ்வர்யாவின் தந்தை ஐஸ்வர்யா உயர் கல்விக்காக தனது வீட்டை அடமானம் வைத்து ரூ . 2 லட்சம் கடன் வாங்கியதாகவும், இதனால், குடும்பத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்தது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 2 ம் தேதி தெலுங்கானாவில் உள்ள தனது சொந்த ஊரில் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கில் எழுதப்பட்ட கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ஐஸ்வர்யா ரெட்டி தான் ஒரு ஐ.ஏ.எஸ் ஆக விரும்புவதாகவும், மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு வந்ததாகவும், ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளைத் தொடர கை மடிக்கணினியை வாங்கக்கூட முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.
இதனால், எனது குடும்பத்திற்கு ஒரு சுமையாக மாற விரும்பவில்லை எனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல. நான் படிக்காமல் வாழ முடியாது என எழுதப்பட்டு இருந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025