நிலவில் இறங்கும் சந்திரயான் 2!பிரதமர் மோடியுடன் அமர்ந்து நேரில் காட்சியை காண இருக்கும் மாணவர்கள்

பிரதமருடன் சந்திராயன் -2 நிலவில் இறங்கும் நிகழ்வை மாணவர்கள் கண்டுகளிக்க உள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலம் நாளை நிலவில் தரையிறங்கவுள்ளது.அதுவும் நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் 2 விண்கலம் தரையிறங்கவுள்ளது .உலகமே இதனை உற்றுநோக்கி உள்ளது.
இந்த அறிய நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து பார்வையிடுகிறார்.பிரதமருடன் அமர்ந்து நேரில் இந்த காட்சியை காண மாணவர்களுக்கு ஆன்லைன் விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது.இந்த போட்டியில் 8 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தை சேர்ந்த 2 மாணவர்கள் , புதுச்சேரியை சேர்ந்த ஒரு மாணவர் உட்பட 70 மாணவர்கள் வெற்றி வெற்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் பிரதமருடன் சேர்ந்து சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை காண உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025