#BREAKING: 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்!

The Bombay Stock Exchange benchmark Sensex rose over 450 points to close at 59,000.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் அதிகரித்து 59,330 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி136 புள்ளிகள் அதிகரித்து 17,713 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. மத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும்  இளைஞர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், தற்போது இந்திய பங்குசந்தையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.