#BREAKING: நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிப்பு – தேசிய தேர்வு முகமை!

The National Examinations Agency has issued a notification regarding the examination centers where NEET entrance examination is to be held.

நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்கள் குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வை எழுத்தவுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையம் குறித்த தகவலைwww.neet.nta.nic.inஎன்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதனிடையே, மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு கடந்த மாதம் 13-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கி, கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.