Tag: NEETExam

நீட் தேர்வை நியாயப்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஏழை மாணவர்கள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நீட் தேர்வில் வினா கசிவு, கருணை மதிப்பெண்கள், முன்எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்ணுக்கு 720 மதிப்பெண் எடுத்தார்கள். இவர்களில் 6 பேர் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என தெரிய வந்ததும் பெரிய விவாதத்தை எழுப்பியது. […]

mk stalin 5 Min Read
MK STALIN - NEET

ஜூலை 7ம் தேதி நீட் முதுநிலைத் தேர்வு!

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு மாற்றாக, நெக்ஸ்ட்(NExT) தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தாண்டு வழக்கம்போல் நீட் முதுநிலை தேர்வு நடத்தப்பட உள்ளது. ‘நெக்ஸ்ட்’ தேர்வு அமல்படுத்தப்படும் வரை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடரும் என சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான ஒழுங்குமுறையை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால்,  முன்னதாக மார்ச் […]

#NEET 4 Min Read
NEET PG 2024

#BREAKING: நீட் வழக்கு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை!

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், நீட் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. நீட் வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. கடந்த மாதம் 27ம் தேதி இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்தது என உச்ச நீதிமன்றம் மனுவை ஏற்றது. இந்த நிலையில், இன்று விசாரணையின்போது, நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா […]

#SupremeCourt 3 Min Read
Default Image

தேசிய கல்விக்கொள்கையை விரைவில் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும் – மத்திய கல்வி அமைச்சர்

நீட் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவல்ல, அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்று மத்திய கல்வி அமைச்சர் பேட்டி. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு விரைவில் ஏற்றுக்கொள்ளும். தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியும் […]

#DharmendraPradhan 4 Min Read
Default Image

#BREAKING: நீட் தேர்வு குளறுபடி – விடைத்தாளை பார்க்க அனுமதி!

நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டு குளறுபடியை நேரில் ஆய்வு செய்ய அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. மதுரையை சேர்ந்த மாணவி ஜெயசித்ரா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதியிருந்தேன். தேசிய தேர்வு முகமை […]

#MaduraiHighCourt 3 Min Read
Default Image

#BREAKING: நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் – வெளியானது புதிய தகவல்!

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்பாக புதிய தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதன்படி, 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி (35%) பெற்றுள்ளனர். விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் தேர்வு எழுதிய […]

govtschoolstudents 3 Min Read
Default Image

திமுக அரசு நீட் தேர்வை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை – ஈபிஎஸ்

மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் நீண்டு கொண்டே இருப்பது கொடுமை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை. நீட் தேர்வை ஒழிப்பதாக திமுக பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நிலையில், அப்பாவி மாணவச் செல்வங்களின் தற்கொலைகள் தொடரும் அவலம் என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் […]

#AIADMK 7 Min Read
Default Image

பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்குரியது -வைகோ

நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என வைகோ வேண்டுகோள். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவப் படிப்பு இல்லாவிடில் இன்னும் எத்தனையோ படிப்புகள் உள்ளன. அவற்றை தேர்வு செய்து வாழ்வில் உயர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட முன் […]

#BJP 2 Min Read
Default Image

#JustNow: நீட் தேர்வு – தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் 80% பேர் தோல்வி!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாத நிலையில், 80% பேர் தோல்வி என தகவல். NEET – UG தேர்வு முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது. இதில், மருத்துவ இளநிலை படிப்பி சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வில் 17.64 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 56.3% என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வில் […]

GovernmentSchools 4 Min Read
Default Image

#NEETUG2022: நாளை நீட் தேர்வு.. மாணவர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்! முழு விவரம் உள்ளே!

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாளை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் தெரிந்துகொள்ளக்கூடிய வழிகாட்டுதல் இதோ. தேசிய தேர்வு முகமை (NTA) எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை (NEET- UG 2022)  மருத்துவ படிப்புகளில் சேர நாளை (ஜூலை 17) நீட் நுழைவுத் தேர்வை நடத்த உள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர். தேர்வு மதியம் 2 […]

NationalTestingAgency 12 Min Read
Default Image

#JustNow: நீட் தேர்வு – அரியலூரை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை. நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவி, தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு […]

#Ariyalur 3 Min Read
Default Image

கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கே நீட் – அமைச்சர் பொன்முடி

தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பயன்படுகின்றன என அமைச்சர் பேச்சு. சென்னை பல்கலைக்கழக 164-ஆவது பட்டமளிப்பு விழா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தராக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் பிஎச்டி மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் உள்பட 712 பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் போன்ற […]

#ChennaiUniversity 3 Min Read
Default Image

நீட் தேவையில்லை என்பதே அதிமுகவின் கொள்கை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மாணவ, மாணவிகளை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளது திமுக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை அதிகரித்துள்ளோம். தமிழகத்திற்கு நீட் வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. நீட் தேவையில்லை என்பது அதிமுகவின் கொள்கை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து என உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் ஏன் செய்யவில்லை? என கேள்வி […]

#AIADMK 4 Min Read
Default Image

#BREAKING: நீட் முதுநிலை தேர்வை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்த மத்திய அரசு!

மார்ச் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் முதுநிலை தேர்வை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு. மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS), 2022 ஆம் கல்வி ஆண்டில் MD, MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு (NEET PG EXAM 2022) வரும் மார்ச் 12 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டியிருந்தது. NBEMS இன் அதிகாரப்பூர்வ தளமான natboard.edu.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, […]

#CentralGovt 3 Min Read
Default Image

#BREAKING: ஆளுநருக்கு எதிராக மாநிலங்களவையில் கடும் அமளி., திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழக எம்பிக்கள் கண்டம் முழக்கம். டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று மாநிலங்களவை தொடங்கி நடைபெற்று வருகிறது. அவை தலைவரான வெங்கையா நாயுடு, முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவதற்கான நேரத்தில் யாரெல்லாம் பேசுவதற்கு பெயர் கொடுத்திருந்தார்களோ, அவர்களை பேசும்படி அவர் தலைவர் அழைப்பு விடுத்தார். அப்போது, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநருக்கு எதிராக மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]

#Parliament 6 Min Read
Default Image

#BREAKING: நீட் மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை திருப்பி அனுப்பினார் தமிழ்நாடு ஆளுநர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாகவும், திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்.1-ஆம் தேதி தமிழக அரசுக்கு விளக்கி உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களை நீட் […]

#RNRavi 4 Min Read
Default Image

பரீட்சை உங்க உயிரை விட பெருசில்லை -நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ…!

தற்கொலை செய்து கொள்வது உங்களை ரொம்ப பிடிச்சவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை என நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.  தமிழகம் முழுவதிலும் நீட் தேர்வு காரணமாக தொடர்ச்சியாக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து உயிரிழந்து வரும் நிலையில், மாணவர்களின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிலர், மாணவர்கள் எதற்கும் துணிந்து நிற்க வேண்டும் எனவும் அறிவுரை […]

#suicide 4 Min Read
Default Image

அதிர்ச்சி : நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி..!

செங்கல்பட்டை சேர்ந்த நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.  தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வாகிய நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்வதில் இன்னும் பின்வாங்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 12-ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதற்கு முன்பதாகவே சேலத்தை சேர்ந்த தனுஷ் மற்றும் அரியலூரை சேர்ந்த கனிமொழி எனும் மாணவி […]

#student 5 Min Read
Default Image

#BREAKING: நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிப்பு – தேசிய தேர்வு முகமை!

நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்கள் குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வை எழுத்தவுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையம் குறித்த தகவலை www.neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனிடையே, மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் […]

examinationcenters 2 Min Read
Default Image

NEET – PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

NEET – PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இட ஒதுக்கீட்டில் வரும் 16 முதல் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ளலாம் என NBE அறிவிப்பு. செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ள NEET – PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 27% OBC பிரிவினர் அல்லது 10% EWS பிரிவினர் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் உரிமை கோர விரும்பினால், வரும் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ளலாம் என்று NBE (NATIONAL BOARD […]

#Reservation 3 Min Read
Default Image