#BREAKING : இந்தியாவில் இன்று தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதா..? குறைந்துள்ளதா..?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,281 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 893 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்2,34,281 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 893 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,10,92,522  ஆக உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,35,532ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,34,281 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 1,251 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,10,92,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 893 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,94,091 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 3,52,784 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,87,13,494 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  18,84,937 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 1,65,70,60,692 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 62,22,682பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.