#BREAKING: அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி – உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Work on setting up CCTV in all police stations should begin immediately. Supreme Court issued this order to all States and Union Territories.

நாடு முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் காவல்துறையினர் விசாரணைக்காக கைதிகளை அழைத்துவந்து அடித்துக் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில்,  அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

மேலும், இந்த வழக்கை வருகின்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து அன்றைய தினம் எந்தெந்த மாநில அரசுகள், எந்தெந்த அளவிற்கு பணிகளைச் செய்துள்ளனர் என்பதை நாங்கள் தெரிந்து கொள்கிறோம் என தெரிவித்தனர். மக்கள் மீது உண்மையாக அக்கறை இருந்தால், நீதிமன்றத்தை மதிப்பதாக இருந்தால் எந்தெந்த அரசுகள் எவ்வளவு விரைவாக பணிகளை முடிக்க போகிறது என்பதை பார்க்கவுள்ளோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஜனவரி மாதம் 27ஆம் தேதி அன்று பணிகளை முடிக்காத அரசுகளுக்கு எந்த மாதிரியான கண்டனங்களை நீதிமன்றம் தெரிவிக்கப்போகிறது என்பதை இன்று தெரியவரும். சமீபத்தில் சத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை -மகன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 10 காவல்த்துறை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.