இந்திய எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் 70_ஆவது குடியரசு தினத்தை கொண்டாடினர்.
70வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் குடியரசு தினத்தை கொண்டாடினர்.அப்போது பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இருக்கும் வாகா எல்லையில், இந்திய தேசியக் கொடியை ஏற்றி மறைந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய இந்திய ராணுவத்தினர், இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொண்டு குடியரசு தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.
அசாம் மாநிலத்தில் உள்ள புல்பாரியில் உள்ள வங்கதேச எல்லையில் இரண்டு நாட்டு வீரர்களும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். வங்கதேச ராணுவ வீரர்களுக்கு, இந்திய ராணுவத்தினர் இனிப்புகளை கொடுத்து குடியரசு தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.