கொரோனாவை விரட்ட எறும்பு சட்னியா...? தடுப்பூசி போடுங்கள் – உச்ச நீதிமன்றம்!

The Supreme Court has ruled that not everyone in the country can order red ant chutney to eradicate corona, and that everyone should be vaccinated.

கொரோனாவை ஒழிக்க நாட்டிலுள்ள அனைவருக்கும் சிவப்பு எறும்பு சட்னி ஆர்டர் செய்ய முடியாது, அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் நாடு முழுவதிலும் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவை ஒழிக்கும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட வருகின்றனர். இந்த சிவப்பு எறும்புகள் உடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதைத் தேங்காய் சட்னி போல பயன்படுத்துகிறனர்.

அண்மையில், ஒடிசாவை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அதில் சிவப்பு எறும்பு சட்னியில் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருப்பதாகவும், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கொரோனாவுக்கு மருந்தாக இதனை பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, பாரம்பரியமாக கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்துகள் நிறைய உள்ளதாகவும், ஆனால் இவற்றையெல்லாம் கொரோனாவிற்கு மருந்தாக பயன்படுத்த முடியாது எனவும், இந்த எறும்பு சட்னியை நீங்கள் உங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருக்கலாம். ஆனால் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் இந்த எறும்பு சட்னியை நாங்கள் கேட்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒடிசா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்த மனுதாரர் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என கூறி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.