Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு பின்னர் திரும்பி பெறப்பட்ட புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடிய ஒரு வருடத்திற்கு மேலாக திகார் சிறையில் இருந்து வருகிறார். இதன்பின் மதுமான கொள்கை முறைகேடு தொடர்பான கொள்கை […]
Arvind Kejriwal: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு. கடந்த மாதம் மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றம் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் […]
SBI : தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் முறையை கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தடை விதித்து உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடு வைத்தது. Read More – காவேரி நீரை மத்திய அரசு கூறினாலும், தமிழக அரசு […]
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ளது SBI வங்கி. கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்குவதை தடை செய்து உத்தரவிட்டது. மேலும், ஏப்ரல் 2019 முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. READ MORE – தேர்தல் பத்திரங்கள்… நாளை தான் கடைசி.! ஸ்டேட் […]
Electoral Bonds : அரசியல் கட்சிகள் நிதி பெற வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்கள் முறை ரத்து செய்து கடந்த மாதம் 15ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பத்திர திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை, இதனால் அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. Read More – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுன்க் மாமியாருக்கு இந்தியாவில் எம்பி பதவி.! மகளிர் தின சர்ப்ரைஸ்..! இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் […]
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை சரத் பவார் நீக்கினார். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சி இரு குழுவாக பிளவு ஏற்பட்டதால் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதற்கிடையில் கட்சி பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக அஜித் பவார், சரத் பவார் அணிக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த […]
அரசியல் கட்சிகள் நிதி பெற வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கடந்த 2018ல் கடும் எதிர்ப்பை மீறி மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறலாம். ஆனால், ஒருவரிடம் இருந்து அதிகமாக தொகை பெரும் அரசியல் கட்சிகள், அதன் முழு விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என இருந்தது. பின்னர், இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டதால், நன்கொடைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை […]
அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதிகளை பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், வங்கிகள் உடனடியாக தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும். மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் பத்திர முறை மூலம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் ஸ்டேட் வங்கி (SBI) வழங்க வேண்டும் என […]
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை சரத் பவார் நீக்கினார். பின்னர் அதிக எம்.எல்.ஏ.க்களை ஆதரவு கொண்ட அஜித் பவார் பாஜக ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவளித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்று கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த 53 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் அஜித் பவார் பிளவுக்கு பிறகு சரத் பவாருக்கு தற்போது 12 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கட்சி […]
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை நேற்று முன்தினம் அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைதுக்கு முன்பே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் ஹேமந்த் சோரன். இதனால் ஜார்க்கண்ட் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் […]
திண்டுக்கல் மருத்துவரை மிரட்டி 20 லட்சம் பறித்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக […]
உத்திரபிரதேசத்தில் உள்ள ஷாஹி இத்கா மசூதி, ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோவில் வளாகத்திற்கு அருகில் உள்ளது. 1670ல் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் மதுராவில் உள்ள கேசவ்தேவ் கோவில் இடித்து “ஷாஹி இத்கா மசூதி” கட்டப்பட்டதாக இந்து தரப்பில் கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 13.37 ஏக்கர் நிலத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயில் 11 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. 2.37 ஏக்கர் பரப்பளவில் ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 13.37 ஏக்கர் மொத்த நிலமும் கிருஷ்ண ஜென்மபூமிக்கு சொந்தமானதுதான் […]
பெண் திருமணமாகாததால் கருக்கலைப்பை மறுக்க முடியாது என ஒருமித்த உறவில் இருந்த 25 வயது பெண்ணின் 24 வார கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தேர்வு அவருக்கான உரிமையானது, அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அவரது தனிப்பட்ட சுதந்திரத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். “திருமணமாகாத பெண்ணுக்கு பாதுகாப்பான கருக்கலைப்புக்கான உரிமையை மறுப்பது அவரது தனிப்பட்ட சுயாட்சி மற்றும் சுதந்திரத்தை […]
விஜய் மல்லையா நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நடந்ததற்காக அவருக்கு 4 மாத சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல கோடி ரூபாய் கடன் பெற்று இந்தியாவை விட்டு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் இல்லை என்றாலும், அவருக்கு எதிரான பல்வேறு வழக்குகள் இங்கு நடந்து வருகிறது. அதற்கான தீர்ப்புகளும் வந்த வண்ணம் தான் இருக்கிறது. அப்படி தான் 2017ஆம் தொடர்ந்த வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வந்துள்ளது. விஜய் […]
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்திரபிரதேசம் வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. அதனை ஒட்டி உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபடுவதற்கு அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் இந்து பெண்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், மசூதி வளாகத்திற்குள் கள ஆய்வு செய்யவும் அதை வீடியோவாக பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]
டெல்லி:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. மேலும்,ஆணையத்தின் செயல்பாடுகள்,மருத்துவக்குழு உள்ளிட்டவை பற்றி விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பழமையானது என்றும்,அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்தால் அணைக்கு சேதம் ஏற்படும் என்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கேரள அரசுடனான நல்லுறவை பேணி பாதுகாக்கும் அதே வேளையில் முல்லை பெரியாறு பாசன விவசாய பிரதிநிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக […]
தமிழகத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது .இதனை எதிர்த்து,தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இத்தகைய சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படலாம் என அனுமதி வழங்கியது.அதன்பின்னர்,கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகம் […]
மருத்துவப் படிப்பில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று முன்னதாக மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கிடையில்,மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% […]
கொரோனாவை ஒழிக்க நாட்டிலுள்ள அனைவருக்கும் சிவப்பு எறும்பு சட்னி ஆர்டர் செய்ய முடியாது, அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் நாடு முழுவதிலும் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவை ஒழிக்கும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட வருகின்றனர். இந்த சிவப்பு எறும்புகள் […]