சென்னை :தவெக கட்சியின் முதல் மாநில மாநாடானது நேற்று விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கிட்டத்தட்ட 13 லட்சம் தொண்டர்கள் வருகை தந்தாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அனல் பறக்க பேசினார்.
அவரது அந்த மேடைப் பேச்சின் எதிரொலியாக பல கட்சித் உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என அனைவரும் வாழ்த்துகளை அவர்களது எக்ஸ் தளத்தில் தெரிவித்து வந்தனர். அதே போல ஒரு சிலர் எதிர்மறையான கருத்துக்களையும் விஜய் பேச்சுக்கு எதிராக முன் வைத்தனர்.
அந்த மேடையில் பேசிய விஜய், ‘அரசியல் எதிரி திமுக எனவும்’, ‘கொள்கை எதிரி பாஜக எனவும் தெரிவித்திருந்தார். இது அரசியல் களத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இப்படி ஒரு புறம் இருக்கையில், ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண் விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது அரசியல் களத்தில் மேலும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் பதிவிட்ட அந்த பதிவில், “துறவிகளும், சித்தர்களும் அதிகம் வாழ்ந்த தமிழ்நாட்டில் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் விஜய்க்கு மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”, என பவன் கல்யாண் பதிவிட்டிருந்தார்.
unknown node