ரூ. 63 கோடி மதிப்பிலான வாட்ச் கட்டிய ஆனந்த் அம்பானி! வாய்பிளந்த பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் மனைவி
Anant Ambani: இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து மார்ச் 3-ஆம் தேதி வரை திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் இந்தியாவில் உள்ள திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் மட்டுமின்றி, உலக அளவிலான தொழிலதிபர்கள், அரசியல், சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தார், இயக்குநர் அட்லி அவர் மனைவி ப்ரியா உள்ளிட்டோரும் இதில் கலந்துக் கொண்டனர். இந்த நிலையில் திருமணக் கொண்டாட்டத்தின் போது ஆனந்த் அம்பானி Patek Philippe Sky Moon Tourbillon வாட்ச் அணிந்திருந்தார்.
Read More – மக்களவை தேர்தல்..! வேட்பாளர்கள் பட்டியல் வெளியான அடுத்தநாளே விலகிய பாஜக வேட்பாளர்
இதன் விலை ரூ. 63 கோடி ஆகும். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது, ஆனந்த் அம்பானியின் வாட்ச் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவர் மனைவி பிரிசில்லாவையும் பெரியளவில் ஈர்த்துள்ளது, அதை அவர்கள் ஆச்சரியாக பார்த்த வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், ’கடிகாரம் மிக அருமையாக உள்ளது, நான் அதை விரும்பலாம் என வீடியோவில் பிரிசில்லா கூறுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரியளவில் வைரலாகியுள்ளது.
Mark Zuckerberg & his wife Priscilla was surprised to see Anant Ambani’s watch. Anant was seen carrying beautiful audemars piguet royal oak open worked skeleton worth INR 14 crore. ????#AnantRadhikaWedding | #AnantAmbani pic.twitter.com/DEql5XFWUA
— Radhika Chaudhary (@Radhika8057) March 3, 2024