இன்று முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறப்பு – மகாராஷ்டிரா அரசு!

Permission has been granted to open all places of worship in Maharashtra from today.

மகாராஷ்டிராவில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டிருந்தாலும், கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி நவராத்திரி பண்டிகை. மகாராஷ்டிராவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி தான். எனவே இதனை முன்னிட்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் முறையான கொரோனா தடுப்பு வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.