இந்தியாவுக்கு உதவுமாறு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகை...!

Actress Priyanka Chopra has appealed to the United States to help India falter due to the increase in corona spread.

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவுமாறு அமெரிக்காவிடம் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இந்த காரணத்தினால்,கொரோனா தொற்றினால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்களில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா,அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”கொரோனா தொற்று பாதிப்பினால் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு தடுப்பூசி மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொடுத்து அமெரிக்க அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்”,என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க அரசாங்கம்,”இந்திய நாட்டிற்கு உதவி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.உங்களது வேண்டுகோளுக்கு நன்றி”,என்று கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.