வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது அதிபர் பதவியில் இருக்கும் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்தது, 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு ஆகிய வழக்குகளில் சிக்கிய காரணத்தால் அமெரிக்க நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்தது. இதனையடுத்து, ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி குற்றவாளியில் இருந்து அவரை விடுதலை செய்தார். பொதுவாகவே, அமெரிக்காவின் சட்டத்தைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுமன்னிப்பு வழங்கினால், எதாவது குற்ற […]
அமெரிக்கா : வேற்றுகிரகவாசிகள் பூமியில் இருக்கிறார்களா இல்லையா? என்கிற கேள்வி விடை தெரியாத மர்மமாக இருந்து வருகிறது. இந்த சூழலில், இந்த நீண்ட நாள் மர்மங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நாசாவின் தொடர்புடையாளர் திரைப்பட தயாரிப்பாளர் சைமன் ஹாலண்ட் கடந்த மாதம் “வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சான்றுகளைப் பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் அது வெளியிடப்படும் எனத் தெரிவித்து இருந்தார். இவர் பேசியதற்கு முன்னதாகவே, அதாவது கடந்த ஜூன் மாதம் ஏலியன் இருப்பது குறித்து […]
Flight: டொமினிக்கன் குடியரசு நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற விமானத்தில் 41 வயதான பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெபானி ஸ்மித் என்ற 41 வயதான பெண் அமெரிக்காவின் சார்லோட் நகருக்கு விமானத்தில் பயணம் செய்த போது நடுவானில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானமானது Turks and Caicos தீவில் உள்ள பிராவிடன்சியல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் ஸ்டெபானி ஸ்மித், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. […]
USA: அமெரிக்காவில் இந்திய பரதநாட்டிய கலைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் இந்திய வம்சாவளியினரின் உயிரிழப்புகள் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மேலும் ஓர் உயிரிழப்பு அரங்கேறியுள்ளது. இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ், குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் ஆகிய கலைகளில் தேர்ந்தவர். இவர் சென்னையில் உள்ள புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். அமர்நாத் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடனத்தில் MFA படிப்பை படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், […]
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது, 17 வயது மாணவன் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 17 வயதான அந்த மாணவன், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் காயமடைந்தவர்களில் நான்கு மாணவர்களும் ஒரு பள்ளி நிர்வாகியும் அடங்குவதாக அயோவா குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். ஈரான் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 103-ஆக உயர்வு..! பின்னர், அந்த […]
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குறிப்பாக கல்வி நிலையங்களில் இந்த துப்பாக்கி சூடு என்பது சமீப காலமாகவே பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் (UNLV) உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று ( புதன்கிழமை) ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 3 பேர் […]
ஈரானில் ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்கிறார்களா என கண்காணிக்கும் ‘கலாச்சார காவல்துறை’ மீது அமெரிக்கா பொருளாதார தடையை அறிவித்ததுள்ளது. சமீபத்தில் செப் 15 ஆம் தேதி ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததாக கூறி இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் ஹிஜாப் அணிவது குறித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் போராட்டடங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த […]
தெற்கு மிசிசிப்பியின் வளைகுடா கடற்கரைப் பகுதியில், பர்கோல்டேரியா சூடோமல்லி என்ற கொடிய பாக்டீரியா கண்டுபிடிப்பு. அமெரிக்காவில் உள்ள நீர் மற்றும் மண் மாதிரிகளில் முதன்முறையாக ஒரு கொடிய பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நேற்று நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுக்கு நோயாளிகளை பரிசோதிக்கும் போது அதை கவனத்தில் கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு மிசிசிப்பியின் வளைகுடா கடற்கரைப் பகுதியில், பர்கோல்டேரியா சூடோமல்லி (Burkholderia pseudomallei) என்ற […]
அமெரிக்கா:ஜனவரி 19 முதல் இலவச கொரோனா சோதனை கருவிகளை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கில் வேகமாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,கடந்த ஒரே நாளில் 7,83,206 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,ஒரே நாளில் 2099 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும்,அமெரிக்க மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் 500 மில்லியன் இலவச கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் டெஸ்ட் கிட் வழங்கப்படும் என்றும்,இதனை […]
சுமார் ரூ.83,000 கோடி வருமான வரி செலுத்த உள்ளதாக அறிவித்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த ஆண்டு 11 பில்லியன் டாலர் (சுமார் ரூ.83,000 கோடி) வரி செலுத்த உள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும் என கூறப்படுகிறது. எலான் மஸ்க் தனது முதல் Zip2 நிறுவனத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ், […]
அமெரிக்கா – சீனா இடையே உருவாகும் விரிசலும் பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியடைந்த தெற்கு ஆசியா எனும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கருத்தரங்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் பங்கேற்று உள்ளார். அதில் பேசிய பிரதமர், பனிப்போர் நோக்கி செல்லும் சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், நாடுகள் குழுக்களாக உருவாகி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடுகள் குழுக்களாக […]
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனாவாகிய ஓமைக்ரான் எனும் வைரஸ் தென் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதால் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஓமைக்ரான் வைரஸ் அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆப்பிரிக்க நாடான கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்காவிற்கு திரும்பி வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியாக உள்ளதாகவும், […]
அமெரிக்காவுடன் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து 3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,000 கோடி) மதிப்பீட்டில் 30 மல்டி-மிஷன் ஆயுதம் கொண்ட பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்குவதற்கான நீண்டகால யோசனையை இந்தியா தற்போது உறுதி செய்ய உள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனா என இரு எல்லை தொடர்பான போர் வந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் இந்தியா எல்லையில் […]
பிரதமர் மோடி அமரிக்கா சென்றால், அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் முதல் முறையாக இருவரும் நேரடியாகச் சந்திப்பார்கள் என எதிர்பார்ப்பு. பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 22-ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, 23ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து உள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் விவகாரம், சீனாவுடனான எல்லை பிரச்சனை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக […]
அமெரிக்காவின் பேஸ்பால் மைதானத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததில் சுமார் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடூரமான துப்பாக்கி வன்முறையின் நீண்ட மற்றும் வேதனையான வரலாற்றை அமெரிக்கா கொண்டுள்ளது.காரணம்,பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களை குறிவைத்து அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. அந்த வகையில்,அமெரிக்க தலைநகரில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் நிறைந்த வாஷிங்டன் நேஷனல்ஸ் மற்றும் சான் டியாகோ பேட்ரெஸ் இடையேயான பேஸ்பால் ஆட்டத்தின் போது,மைதானத்திற்கு வெளியே சனிக்கிழமையன்று நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. […]
வெளிநாட்டு ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் முக்கியமான உள்கட்டமைப்புக்கு எதிரான தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க கணினி மோசடி மற்றும் சட்டத்தை மீறும் ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் வழங்குவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.ஏனெனில்,அரசாங்கத்தின் முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து ரான்சொம்வேர் (ransomware) தாக்குதல்களில் ஹேக்கர்கள் ஈடுபடுகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெகுமதி சலுகையைப் பற்றிய கூடுதல் தகவல்களை https://rewardsforjustice.net/english/ என்ற இணையதளத்தில் […]
அமெரிக்காவில்,12 தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று நேற்று திடீரென்று சரிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது,மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியான்மி பீச் பகுதியில் உள்ள 12 தளங்கள் கொண்ட ஒரு அடுக்குமாடி கட்டிடம், “சாம்ப்லைன் டவர்ஸ் சவுத்” என்று அழைக்கப்படுகிறது. இது 1981 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.இதன்காரணமாக,அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த சில வாரங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு வந்தது. இந்நிலையில்,நேற்று அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று […]
மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்க உதவும் ஹெல்மெட் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த பிரையன் ஜான்சன் என்பவர் உருவாக்கியுள்ளார். அமெரிக்காவில் உள்ள கர்னல் நிறுவனத்தை சேர்ந்த பிரையன் ஜான்சன் என்பவர்,சென்சார்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் கூடுகளுடன் கூடிய ஒரு புதுமையான ஹெல்மெட் ஒன்றை உருவாக்கியுள்ளார். மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஹெல்மெட் மூலமாக,மூளையின் மின் தூண்டுதல்களையும், மூளையின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க முடியும். இதனால் மனநல கோளாறுகள்,மூளை செயலிழப்பு,பக்கவாதம் பற்றிய நுண்ணுக்கமான செயல்பாடுகளை அறிய உதவும் என ஆராய்சியாளர்கள் […]
கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவுமாறு அமெரிக்காவிடம் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இந்த காரணத்தினால்,கொரோனா தொற்றினால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்களில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா,அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”கொரோனா தொற்று பாதிப்பினால் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு தடுப்பூசி மருந்துகள் மற்றும் […]
500 டாலர்களுக்கும் குறைவான 2 சட்டைகளை திருடிய குற்றத்திற்காக அமெரிக்காவை சேர்ந்த கருப்பின முதியவர் 20 ஆண்டுகளுக்குப் பின்பு தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கருப்பினத்தவர் தான் கெய் பிராங்க். இவருக்கு தற்போது வயது 67 ஆகிறது. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 500 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள இரண்டு சட்டைகளை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குற்றத்திற்காக இவருக்கு மிகப் பெரும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு நீதிபதிகள் 23 […]