ஹைதராபாத் :கையில் பீர் பாட்டிலுடன் ஹைதராபாத்தில் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் இது பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
ஹைதராபாத் மாநிலத்தில் எல்.பி.நகர்-நாகோல் சாலையில் மதுபோதையில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் சாலையில் பொது இடத்தில் பீர் பாட்டிலுடன் மதுகுடித்துக்கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும் இருந்தனர். இதனை அந்த சாலையில், நடைப்பயிற்சி வந்தவர்கள் பார்த்ததும் பொது இடத்தில் என் இது போன்று செய்கிறீர்கள் என்று கேட்டனர்.
உடனடியாக அந்த பெண் அப்படி சொன்னவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஒரு சிலர் அந்த பெண் பீர் குடிப்பதை வீடியோவும் எடுத்தார்கள். இதனை பார்த்த அந்த பெண் எதற்காக என்னை வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்க வீடியோ எடுப்பவர்களுக்கு பதிலுக்கு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அந்த பெண் வீடியோ எடுப்பதை நிறுத்துங்கள் என்று கூறி போனையும் பிடிங்க முயற்சி செய்தார்.
இதனை பார்த்த அங்கிருந்த பெயர்வர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போது இடத்தில் இப்படியான மோசமான செயல்களில் ஈடுபடவேண்டாம். எல்லாரும் வந்து போகும் இடத்தில் இப்படியா செய்வீர்கள் ? என்று கூறினார்கள். ஆனால், அந்த பெண் கோபத்துடன் பெயர்வர்களுடனுமே வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்திற்கு மேல் வாக்கு வாதம் அதிகமான நிலையில், அந்த பெண்ணை முதலில் இந்த இடத்தில் நிற்காமல் வீட்டுக்கு செல்லுங்கள் என அங்கிருந்த பெரியவர்கள் காட்டத்துடன் கத்தினார்கள். பின் அந்த பெண்ணுடன் வந்த ஆண் அவரை சமாதானம் செய்து காரில் ஏறி அழைத்து சென்றார். இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை நாகோல்-எல்பி நகரில் இருந்து வீடியோ வைரலாக பரவியதையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
unknown node