சென்னை : ஸ்ருதிஹாசனுக்கு திறமை அதிகமாக இருந்தாலும் கூட ஆரம்ப காலத்தை போல தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறலாம். தமிழில் வாய்ப்பு இல்லை என்ற காரணத்தால் தான் சமீபகாலமாக ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். நடிக்க நுழைந்த ஆரம்ப காலத்தில் கொஞ்சம் உடல் இடை அதிகமாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் மெலிந்த தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். இப்போது உடலில் அதிக அளவுக்கு கவனம் செலுத்துகிறாரா? இல்லையா என்பது […]
சென்னை : வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அந்த தகவலின்படி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மது விற்பனையை மேற்கொள்ள சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் […]
ஆன்லைனில் மது பானம் : வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் அனுமதி பெற அந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஆம், Swiggy, Zomato மற்றும் BigBasket போன்ற […]
ஹைதராபாத் : கையில் பீர் பாட்டிலுடன் ஹைதராபாத்தில் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் இது பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். ஹைதராபாத் மாநிலத்தில் எல்.பி.நகர்-நாகோல் சாலையில் மதுபோதையில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் சாலையில் பொது இடத்தில் பீர் பாட்டிலுடன் மதுகுடித்துக்கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும் இருந்தனர். இதனை அந்த சாலையில், நடைப்பயிற்சி வந்தவர்கள் பார்த்ததும் பொது இடத்தில் என் இது போன்று செய்கிறீர்கள் என்று கேட்டனர். உடனடியாக அந்த பெண் அப்படி சொன்னவர்களிடம் வாக்கு […]
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சரவணன் என்ற விவசாயிக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கிறது. இந்த விவசாய நிலத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இதனை பார்த்த சரவணன், இங்கு மது அருந்தாதீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் கையில் வைத்து இருந்த கத்தியை வைத்து சரவணனை குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய […]
தமிழில் ஜெமினி படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கலாபவன் மணி, 2016 ல் தனது 45 வது வயதில் உயிரிழந்தார். நடிகர் மணியின் திடீர் மரணத்தில் சந்தேகமடைந்தனர். தையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியது. இந்நிலையில், நடிகர் கலாபவன் மணி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம், இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ குழுவில் இடம்பெற்றிருந்த கேரள ஐபிஎஸ் […]
வடமாநில இளைஞர் ஒருவர் சென்னையில் உள்ள திருவொற்றியூர் ரயில்வே பாலத்தில் சுமார் 20 அடி உயரத்தில் இரும்புக் கம்பியின் மேல் அமர்ந்துகொண்டு தனக்கு மதுபாட்டில் வாங்கி தந்தால் தான் கீழே இறங்குவேன் என அந்த இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் உடனே போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர். பிறகு அங்கு சென்ற போலீசார் அந்த இளைஞரிடம் கீழே இறங்க சொல்லி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எவ்வளவோ கூறியும் கீழே இறங்க அந்த […]
கேரளாவில், மது வாங்க பணம் தராததால் தனது 75 வயது தாயை தீ வைத்து கொளுத்திய நபர் கைது. கேரளாவின் திருச்சூரில் 55 வயது நபர் ஒருவர் மதுபானம் வாங்க பணம் தர மறுத்ததால் 75 வயதான தனது தாயை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மதுபானம் வாங்குவதற்கு பணம் தர மறுக்கும் போது அந்த நபர் தனது […]
கொல்கத்தாவில் உள்ள மது பிரியர்களுக்கு 10 நிமிடங்களில் மதுவை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனம். நாட்டில் கொரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டபோது, அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தங்கள் வீட்டு வாசலில் வழங்கப்பட்டது. ஆனால், மதுபானங்கள் டெலிவரி செய்யப்படாததால், மது பிரியர்கள் வேதனையடைந்தனர். இந்த நிலையில் தற்போது, ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், மதுபானத்தை எளிதாக அணுகும் வகையில் உதவ வந்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் […]
Telangana : தெலுங்கானா மாநிலத்திலுள்ள மண்சேரியல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் மே மாத விடுமுறைக்கு முன்னதாக பிரியாவிடை நடத்த வேண்டும் என விடுதி வார்டனிடம் அனுமதி கோரியுள்ளனர். அந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்க கூடிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் வெளியிலிருந்து வரக்கூடிய மாணவர்களிடம் சொல்லி மது வாங்கி பிரியாவிடை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த விருந்தின் போது மாணவர்கள் […]
முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.மேலும்,மக்கள் வெளியில் வரும் பொது முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது […]
மது வாசனை வருவதால் ஒரு நபர் குடிபோதையில் உள்ளார் என கூற முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் காவல் நிலையத்திற்கு அடைக்கப்பட்ட போது மது போதையில் இருந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள், மது வாசனை வருவதால் அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவோ அல்லது மது அருந்தியதாகவோ அர்த்தமில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், மது போதையில் கலவரம் செய்யாமல், பொதுமக்களுக்கு […]
மதுவிலக்கு அமல் செய்த பிறகு பீகாரில் குற்றங்கள் குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தின் முதல்வராகிய நிதீஷ்குமார் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்தி உள்ளார். இந்த சட்டத்தின்படி மது விற்பனை செய்பவர்கள், குடிப்பவர்கள் மற்றும் மதுவை பதுக்கி வைப்பவர்களுக்கு 10 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என […]
வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததால், தொழிற்சாலை ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு, இவருக்கு ரூ.5.5 லட்ச இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் அருகே உள்ள லிவிங்ஸ்டனில் உள்ள யங்ஸ் கடல் உணவு தொழிற்சாலையில் வேலை செய்யும் மல்கோர்சாடா க்ரோலிக், வேலைக்கு வருவதற்கு 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்த காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். க்ரோலிக் காலை 5 மணிக்கு மூன்று பீர் குடித்துள்ளார். இவருக்கு மதியம் 2 மணிக்கு […]
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் சானிடைசர் கொண்டு போலி மதுபான தயாரித்த 9 பேரை அதிரடியாக கைது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் அரசு மதுபானக் கடைகளை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் அல்லாடிவந்த நிலையில் சிலர் அதனை பயன்படுத்திக் கொண்டு ஆங்காங்கே சட்ட விரோதமாக வீட்டிலேயே மது தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்த அகரம் ஊராட்சி இராமநாதன் குப்பத்தில் போலி மதுபானம் வீட்டிலேயே தயாரிக்கப்படுவது குறித்து […]
வாடகைக்கு குடி இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் மது அருந்திவிட்டு அதிக சத்தத்துடன் பாடல்கள் போட்டு ரகளை செய்வதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகனும் பிரபலமான தமிழ் திரையுலகின் நடிகருமாகிய விஷ்ணு விஷால் சென்னை கூந்தன்குளத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு வாங்கி தங்கி இருக்கிறார். கடந்த 4 மாதங்களாக இந்த இடத்தில் குடியிருக்க கூடிய விஷ்ணு விஷால் வந்த நாள் […]
உத்திர பிரதேசத்தில் மதுபானம் கொடுக்க மறுத்த மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள். குற்றம் சாட்டப்பட்ட ராம்கிலாடி என்பவரை காவல்துறையினர் கைது கைது செய்துள்ளனர். இன்று திருமணம் என்றாலே நண்பர்களுக்கு பார்ட்டி என்கின்ற பெயரில் நண்பர்களுக்கு மதுபானம் தான் கொடுக்கின்றன. அந்த வகையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு 28 வயதான நபர் தனது திருமணத்திற்குப் பின் அவர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது நண்பர்கள் கூடுதலாக மது ஊற்ற வேண்டும் என்று கேட்டுக் […]
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மிகவும் திண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்த, சின்ன நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர், ராகுல் (22). இவர் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர் வினோத்ராஜ் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும், குடிப்பழக்கம் இருந்துள்ளது. தற்போது மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இருவரும் யுடியூபை பார்த்து, திராட்சை, நாட்டு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. ஊரடங்கால் தமிழகத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. அதில் டாஸ்மாக் கடையும் அடங்கும்.டாஸ்மாக் கடை மூடியதால் பல இடங்களில் மறைமுகமாக மதுபானங்களை விற்பது , கள்ளசாராயம் தயாரித்து விற்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றார். இதையெடுத்து குக்கரில் சாராயம் காய்ச்சிய விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடலூர் […]
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவரின் லைசென்ஸை (ஓட்டுனர் உரிமம் ) ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதையெடுத்து மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க தனிப்பிரிவு அமைக்கவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.