இளம் பெண் தலையில் விழுந்த மரக்கிளை…! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

அமராவதி: ஆந்திர மாநிலம் திருமலை கோவிலுக்கு சென்ற பெண் மீது மரக்கிளை விழுந்ததில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமலையில் தரிசனம் செய்வதற்காக இளம் பெண் சென்று கொண்டிருந்த போது மெதுவாக நடந்து கோவிலுக்குள் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த பெரிய மரக்கிளை ஒன்று வேகமாக கீழே அவர் மீது விழுந்தது. இதில் அந்த பெண்ணிற்கு தலை மற்றும் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை வழிபாட்டு தளத்தில் இருந்த பக்தர் ஒருவர் தன்னுடைய போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது. வீடியோவில் ” அந்த பெண் வேகமாக சென்று கொண்டு இருக்கும்போது மரத்தின் கிளை கீழே விழுவது தெரிகிறது.
பிறகு மரக்கிளை விழுந்த தாக்கத்தில் அந்த பெண் கீழ் நோக்கி விழுகிறார். இதனை அவர் பக்கத்தில் நின்று பார்த்த ஒருவர் தள்ளி சென்று தப்பித்தார். திருமலை மலையில் உள்ள ஜபாலி க்ஷேத்திரத்தில் ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்ய சென்ற இளம் பெண் மீது மரத்தின் கிளை விழுந்தத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
తిరుమలలో యువతిపై విరిగిపడ్డ చెట్టు కొమ్మ.. యువతికి తీవ్ర గాయాలు
తిరుమల కొండపై ఉన్న జాపాలి క్షేత్రంలో ఆంజనేయస్వామి దర్శనం కోసం వెళ్తున్న ఓ యువతిపై చెట్టు కొమ్మ విరిగిపడింది.
తల, వెన్నెముకకు తీవ్రగాయాలు కావడంతో ఆస్పత్రికి తరలించి చికిత్స అందిస్తున్నారు. pic.twitter.com/I1WzTdJjfb
— Telugu Scribe (@TeluguScribe) July 12, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025