அமராவதி: ஆந்திர மாநிலம் திருமலை கோவிலுக்கு சென்ற பெண் மீது மரக்கிளை விழுந்ததில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமலையில் தரிசனம் செய்வதற்காக இளம் பெண் சென்று கொண்டிருந்த போது மெதுவாக நடந்து கோவிலுக்குள் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த பெரிய மரக்கிளை ஒன்று வேகமாக கீழே அவர் மீது விழுந்தது. இதில் அந்த பெண்ணிற்கு தலை […]
மின்வாரிய ஊழியர்கள் பணியில் மொபைல் போன்களை பயன்படுத்த சிபிடிசிஎல் நிர்வாகம் தடை விதித்து ஆந்திர பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில், அமராவதி மத்திய மின்பகிர்மான கழகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களில் கவனச்சிதறல் இல்லாத சூழலை உருவாக்குவதற்காக அக்டோபர் 1 ஆம் தேதி முதல், பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஊழியர்கள் தங்கள் வேலை நேரத்தை தங்கள் மொபைல் ஃபோனில் வீணாக்குகிறார்கள், இதனால் அன்றாட அலுவலக […]
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.அப்போது,இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அண்மையில் அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்தனர். இந்நிலையில்,ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடிகை ரோஜா உட்பட 25 அமைச்சர்கள் பதவியேற்றனர்.மாநில தலைநகர் அமராவதியில் உள்ள மாநில செயலகம் அருகே நடைபெற்ற பொது நிகழ்ச்சியில்,கவர்னர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், […]
மகாராஷ்டிராவில் உள்ள வரதா ஆற்றில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காணாமல் போய் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தில் உள்ள வரதா ஆற்றில் காலை 10.30 மணியளவில் படகு ஒன்று கவிழ்ந்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. காவல்துறை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் குழு தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் இதுவரை ஒரு சிறுமியின் உடல் […]
அமராவதி அணையிலிருந்து வரும் ஜனவரி 3ம் தேதி முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் நீர் பாசனத்திற்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறந்து விட கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் கோரிக்கை ஏற்று கொண்ட முதல்வர், அமராவதி அணையிலிருந்து வரும் ஜனவரி 3ம் தேதி முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் […]
ஆந்திர மாநிலத்தில் அமராவதியில் கைவிடப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மீண்டும் தொடங்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் தலைநகர் எது என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியை தலைநகராக அறிவித்து அதற்கான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கினார். ஆனால் அதற்கு எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலர் எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் நடைபெற்ற விசாரணையில், நிர்வாக தலைநகரத்தை அமராவதியில் இருந்து […]