உத்தரப்பிரதேசம் :ஆக்ரா அருகேIAF-ன் MiG-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரிலிருந்து விமானம் புறப்பட்டு,பயிற்சிக்காக ஆக்ராவுக்கு சென்று கொண்டிருந்தபோது நேரிட்ட விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த விபத்திற்கு முன்பே விமானத்தில் இருந்து விமானி பாராசூட் மூலம் பத்திரமாக வெளியேறி உயிர் தப்பியதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. போர் விமானம் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
unknown nodeஇந்த விபத்தில் சிக்கிய விமானி பத்திரமாக உள்ளார், உயிர், பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று IAF ஒரு X பதவில் தெரிவித்துள்ளது.
unknown node