அரபிக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை மையம் தகவல்!

அரபிக்கடலில் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Featured image

சென்னை :வடகிழக்கு பருவ மழை விரைவில் தமிழகத்தில் தொடங்க விருக்கும் நிலையில், சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுத்து அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது.

அதன்படி, வரும் செப் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

கிழக்கு திசைக் காற்று தமிழகத்தின் ஊடே செல்வதால் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு  இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.