72-வது குடியரசு தினவிழா : தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு விருது!

As the 72nd Republic Day approaches, a total of 946 police personnel have been presented with awards on Republic Day.

இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், குடியரசு தினத்தையொட்டி மொத்தம் 946 காவல் துறை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இவ்வாண்டிற்கான குடியரசு தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 27 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி மொத்தம் 946 காவல் துறை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி வீரதீர செயல்களுக்கான காவல்துறை விருது இவ்வாண்டு உள்துறை அமைச்சகம் 205 பேருக்கு வழங்கி உள்ளது. மேலும் குடியரசுத் தலைவரின் மெச்சத் தகுந்த பணிக்கான போலீஸ் வருது 89 பேருக்கும், காவல் துறையில் சிறப்பான பணிக்காக 650 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை குடியரசு தினத்தையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர்.