மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி ...!

The total incidence in the country has increased to 32 as 7 more people have been diagnosed with omega-3 infection in Maharashtra.

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாட்டில் மொத்த பாதிப்பு 32 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் கொரோனா வகையாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இது பரவியுள்ள நிலையில், முன்னதாக 25 பேர் நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும்  7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் ஓமைக்ரானால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.