பாகிஸ்தானுக்கு ரகசியத்தை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் விசாகப்பட்டினத்தில், கடற்படை பணியாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆபரேஷன் டால்பின் நோஸ் என்ற பெயரில் இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ரகசிய விபரங்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் விசாகப்பட்டினத்தில், கடற்படை பணியாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இவர்களோடு சேர்த்து ஹவாலா நபர் ஒருவரும் கைதாகியுள்ளனர் என்று ஆந்திர போலீசார் தெரிவித்தார். பின்பு கடற்படை தொடர்பான ரகசிய ராணுவ விவரங்களை இவர்கள் பாகிஸ்தான் தரப்பிற்கு தெரிவிப்பதாகவும், இதனிடையே இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆந்திர போலீசார் மற்றும் மத்திய உளவுத் துறையினர் சேர்ந்து இவர்களைப் பிடித்துள்ளனர்.
unknown nodeஇந்நிலையில், ஆபரேஷன் டால்பின் நோஸ் என்ற பெயரில் இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் விஜயவாடாவில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 3-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆந்திர காவல்துறை மற்றும் மத்திய உளவுத்துறை வேற யாராவது இருப்பார்களா என தீவிர விசாரணை நடத்தி வருகிறது.