புத்தாண்டில் இந்தியாவில் 60 குழந்தைகள் பிறப்பு! உலக அளவில் எத்தனை தெரியுமா?

Globally, childbirth is calculated based on ten countries. In India, 59,995 babies may have been born on New Year's Day.

உலக அளவில் குழந்தைகள் பிறப்பு என்பது பத்து நாடுகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம்.

புத்தாண்டு அன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உலக அளவில் குழந்தைகள் பிறப்பு என்பது பத்து நாடுகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, எத்தியோப்பியாவில் 12,006 குழந்தைகள் பிறக்கக் கூடும் என்றும், அமெரிக்காவில் 10,312, எகிப்தில் 9,455, வங்கதேசத்தில் 9,236, காங்கோ குடியரசு 8,640 குழந்தைகள் பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். 2021-ஆம் ஆண்டை வரவேற்கும் வண்ணம் பிஜி நாட்டில் தான் முதல் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் கடைசி குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும், இதில் குழந்தைகள் சராசரி வாழ்நாள் வயது 84 ஆகவும் இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் வாழ்நாள்  80.9 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். புத்தாண்டு தினத்தன்று உலக அளவில் 3 கோடியே 70 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என கண்டிக்கிறோம் என யூனிசெஃப் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.