தொடர் தாக்குதல்: காஸாவில் 1600 குழந்தைகள் உயிரிழப்பு – UNICEF இயக்குநர்

children killed

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மட்டுமே 1,600 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான UNICEF இயக்குநர் அறிவித்துள்ளார்.  பாலஸ்தீனத்தின் காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு அக்.7, சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் மீது தற்போது வரை இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான போரால் இருதரப்பில் … Read more

உக்ரைனில் இதுவரை 5 மில்லியன் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக யுனிசெஃப் தகவல்..!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையே போர் நிலவி வருகிறது. இந்நிலையில், ஐநாவின் குழந்தைகளுக்கான யுனிசெப் அமைப்பு நடத்திய ஆய்வில் ஏறக்குறைய 5 மில்லியன் உக்ரைன் குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள யுனிசெப் அமைப்பின் அவசரகால திட்ட இயக்குனர் மேனுவல் ஃபோன்டைன், உக்ரைனிலுள்ள 7.5 மில்லியன் குழந்தைகளில் 5 மில்லியன் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது வருத்தமளிப்பதாகவும், இது எனது 31 வருட மனிதாபிமான பணியில் பார்க்காத ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

போதிய உணவின்றி ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகள் தவிப்பு…!

ஆப்கானிஸ்தானில் போதிய உணவின்றி 1 கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் போதிய அளவு உணவு, மருந்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது … Read more

புத்தாண்டு தினத்தன்று சீனாவை விட இந்தியாவில் இருமடங்கு குழந்தை பிறப்பு – யுனிசெப்

இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு தினத்தன்று 33 ஆயிரத்து 615 குழந்தைகளும், இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.  2021 புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. உலகிலேயே இதுதான் அதிகம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 504 குழந்தைகள் பிறந்துள்ளதாக யூனிசெப் மதிப்பிட்டுள்ளது. … Read more

புத்தாண்டில் இந்தியாவில் 60 குழந்தைகள் பிறப்பு! உலக அளவில் எத்தனை தெரியுமா?

உலக அளவில் குழந்தைகள் பிறப்பு என்பது பத்து நாடுகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம். புத்தாண்டு அன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உலக அளவில் குழந்தைகள் பிறப்பு என்பது பத்து நாடுகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, எத்தியோப்பியாவில் 12,006 குழந்தைகள் … Read more

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய சட்டம் வேண்டும் – திரிஷா

யுனிசெப் அமைப்பில் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக நடிகை திரிஷா இருக்கிறார். குழந்தை திருமணம், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து இணையதளம் வழியாக யுனிசெப் களப் பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். அதில், திருமணத்தை நிறுத்துவதிலும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் வெற்றிபெறும் இளம் பருவத்தினரையும் இளைஞர்களையும் கிட்டத்தட்ட சந்தித்து வாழ்த்தினார். மேலும் அவர் கூறியதாவது, குழந்தை திருமணத்தின் ஆபத்துகள் மற்றும் நீண்டகால தாக்கங்கள் குறித்து தங்கள் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய … Read more

நபியை பற்றி அவதூறு பேசியதால் 13 வயது சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறை – எதிர்க்கும் யுனிசெஃப்!

நபியை பற்றி அவதூறு பேசியதால் 13 வயது சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டதை யுனிசெஃப் நிறுவனம் எதிர்த்துள்ளது. வடமேற்கு நைஜீரியாவின் கனோ மாநிலத்தில் உள்ள ஷரியா நீதிமன்றத்தில் ஒமர் ஃபாரூக் எனும் 13 வயது சிறுவன் தனது நண்பனுடன் வாக்குவாதம் செய்த போது முகமது நபி அவர்களை அவதூறாக பேசியதால் குழந்தைகள் உரிமைகள் நிறுவனமாகிய யுனிசெஃப் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் முகமது நபியை அவதூறாக பேசியதற்காக ஸ்டுடியோ உதவியாளர் யஹாயா ஷெரீப்-அமினுவுக்கு … Read more

யேமனில் 2.5 மில்லியன் குழந்தைகள் பட்டினி..? UNICEF.!

யுனிசெஃப் நேற்று வெளிட்ட ஒரு அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் யேமனில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 2.4 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினிக்குத் தள்ளப்படலாம் என தெரிவித்துள்ளது. மேலும், யேமனில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஐந்து வயதுக்கு குறைவான 30,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறியுள்ளது. யேமனின் யுனிசெப் பிரதிநிதி சாரா பெய்சோலோ நயந்தி வெளிட்ட அறிக்கையில்,கடந்த ஐந்தாண்டு யுத்தத்தில் பல குழந்தைகளை இழந்துவிட்டோம். மேலும், கொரோனா … Read more

தெற்காசியாவில் 8,00,000 குழந்தைகள் இறக்கக்கூடும் – யுனிசெஃப் எச்சரிக்கை..!

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.  பல நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றது. உலகம் முழுவதும் 9,714,809 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 491,856 பேர் உள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , யுனிசெஃப், கொரோனா வைரஸ் பாதிப்பால் தெற்காசியாவில் 120 மில்லியன் குழந்தைகள் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள்  அபாயம் உள்ளது என கூறியுள்ளது. பொருளாதாரத்தை … Read more

உலகளவில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடுவார்கள்.. யுனிசெஃப் எச்சரிக்கை!

உலகளவில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடும் நிலைமை ஏற்படும் என “யுனிசெஃப்” மற்றும் “சிறுவர்களை பாதுகாப்போம்” என்ற அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து “யுனிசெஃப்” மற்றும் “சிறுவர்களை பாதுகாப்போம்” என்ற அமைப்பும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வின் முடிவில் அந்த அமைப்புகள் கூறியதாவது, கொரோனா தோற்றால் உலகளவில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும், பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் சார்ந்துள்ளது. இதனால் 2020ம் ஆண்டு இறுதியில் மேலும் 8.6 கோடி சிறுவர்கள் … Read more