டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 42 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,236 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் இம்மாத தொடக்கம் முதலே அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஐ கடந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 42 பேர் உயிரிழக்க, சனிக்கிழமை மட்டும் 46 பேர் உயிரிழந்தனர். இது அம்மாநிலத்தில் இதுவரை இல்லாதளவாகும். அங்கு கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 51,416 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் 11,414 RTPCR / CBNAAT / TrueNat சோதனைகள் மற்றும் 40,002 ராபிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
அதில் 3,292 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,36,651 ஆக அதிகரித்துள்ளது. 2,71,114 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.