அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ...!

A magnitude 4.3 earthquake has shaken the Andaman and Nicobar Islands, causing no damage.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் சேதங்கள் ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தலைநகரமாகிய போர்ட் ப்ளைர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நில அதிர்வுகள் தேசிய மையம் கூறுகையில் 4.3 ரிக்டர் அளவிற்கு 10:47 மணி அளவில் போர்ட் ப்ளைர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் போர்ட் ப்ளைரிலிருந்து 276 கிலோ மீட்டர் தொலைவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் அருகில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நிலநடுக்கத்தால் எந்த பொருட்சேதம் மற்றும் உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.